Wednesday, October 16, 2013

0110-Sampangi ! Or Kanavu !

0110 - சம்பங்கி ! ஓர் கனவு 


பூஜ்ஜியம் ஒன்று ஒன்று பூஜ்ஜியம்
என்னுடன் நின்று பூவையின் போர்களம்
 கனவிலும் கானா காட்சிகள் கண்டினும்
கனவே வெறுங்கனவே
என என் கண்களே சொல்லிடும்

உச்சியில் தந்ததோ
உச்சியும் குளிர்ந்து உன்
உள்ளமும் குளிர்ந்திட

நெற்றியில் நட்டதோ
நெறிகள் மீறாது
நேசம் பகிர்ந்திட

கன்னங்களில் அச்சு
கலங்கமில்லாமல் தான் வைத்தேன்
கண்டெடுத்தவன் போல் நீ
கானவேண்டும் என்றென்னி

முகமெல்லாம் நிறைத்தேன்
ஈரம் மாற்ற ஈரம் செய்தேன்
ஈர நெஞ்சின் தீரம் பார் தோழி

உன்னை என்னை கேட்டுக்கொன்டா
சுழல்கிறது இந்த வாழ்வு
சொக்கட்டான், சதுரங்கம், சோழி!

நிலவை தான்டிய பொழுதே
நிலைமை மறந்தேன்
கழுத்தில் இட்டது தான்
கலக்கத்தின் ஆரம்பம்
அத்துமீறல்களுக்கும்
அர்த்தமுள்ளதோவெனவொரு தேடல்

என்னை மீறும்
என்னம் வந்தே
எல்லை மீற
முகத்திரை விலகியதே
அகம் நாடயிது நீ என்றே
அடிநெஞ்சம் உளறியதே
எனக்கே என் தேவைகள்
ஏனோ இன்று புரிந்ததே

நட்போடு தீராது
காதலிலும் சேராது
புது வித உறவிதுயாது
யாரிடமும் கேட்டறியாது
அன்பிதை உணர்ந்தேன்
மொழியிலாமல் உறைத்தேன்

வீணையின் நரம்புகள்
பட்டினில் போர்த்தி
மென்கழுத்ததை செய்தார்ப்போலும்
பட்டுநூல்களை பக்குவமாய்
பாகு பிடித்தே
யாழ் கம்பிகள் செய்தார்ப்போலும்
ஒரு படைப்பு

மனிதன் படைப்பென்றால் - இசைக்கருவி
மரத்தினில் வாழ்ந்திருந்தால்- இன்னிசைக்குறுவி
மனமெல்லாம் கொள்ளை கொள்பவலே
நீ அறிவாயா நீயே எனக்கு இசையறுவி

யாழோ குழலோ நாதம், என மென்குறள்
யாரோ சொல்வார் எவ்விதம் ஒலிக்குது நின் குறள்
விண்னவர் கண்டிலர்,நாரதன் சாட்சி
(யாவர்க்கும்) நலம்புரி சங்கு அதை முத்தமிட்டு
நன்றிகள் சொல்வதே எனக்கு மீட்சி

அது ஸ்வரம் பிடித்து
எனை ஊக்குவித்த
நாட்களின் என்னிகை நீ உணராய்
ஆயினும் நான் மறவேன்
ஆவினை கன்றே மறந்தாலும்
ஆவியை ஊனே மறந்தாலும்
நான் மறவேன் நான் மறவேன்

அபஸ்வரம் என்னை,
செல்லமாய் தட்டும்
தால ஜதிகள் தந்து காபாற்றும்
உன் இதய துடிப்பு,
ஆதித்தாலம் அஃது தானோ
என்ற நினைப்பும் எனக்கு இருக்கு

என்னை என்னி துடிக்கிற இதயம்
அதை அன்பொடு தாங்கும் தாய்மை
அங்கும் முத்தங்கள் பதித்திருந்தால்
தவறொன்றுமில்லை
அறிந்தும் அறியாமலும் நான் உன் பிள்ளை

குழல் வாய்
சங்கே சங்கு
அடித்தொன்டை
மார்பு மத்தி
மூச்சுக்குழாய்
மேல்வயிறு
அடிவயிறு

ராகங்கள் உருண்டுவரும்
தலைக்கீழ் அறுவி
என்னை பொருத்த வரையினில்
நீயோர் அதிசையப்பிறவி
உன்னில் நனைந்தேனே நான்
பல நாள் உருகி உருகி

முத்தங்களால் படிக்கட்டு
கட்டினேன் நான் இடம் விட்டு
அதில் வழுக்காமல் நகருமோ
என் நாட்கள் இனி பிடிகொண்டு

சம்பங்கி விரல்களுக்கு
முத்தங்கலே ஏற்ற பரிசு,
அவை மன்னிக்காத வரை
இவன் பாழ்நிலம், தரிசு
என்னையும் ஏற்கும் உன்
சிறு இதயம் நிஜமாகவே
மிக மிக பெருசு

இப்படிக்கு நன்றியுள்ள ஜீவன்
போல் இருக்க என்றும் நினைக்கும் இவன்
ஸ்வரமே வீணைக்கு ஆதாரம்
புரியவைத்தாய், அன்பே பெண்மைக்கு ஆதாரம்
பேரன்பாய் செய்கிறாய் நீ அதிகாரம்
ஆதலால்தானடி 
உன்னை சுற்றியே என் கடிகாரம்

Friday, October 21, 2011

aam aam AM


நேற்று நிறைந்ததென கனவை
இன்னுலகில் பகிர்ந்து உவந்தேன் 
நேற்று நடந்ததுவுஊம கனவே
எனச்சொல்லி கண்கள் சுட்டுக்கொண்டேன் 

நேரம் வரவில்லை எனச்சொல்லி 
கடி காரத்தை குறைச்சொல்லவோ 
ஈரம் அற்றவர் பால் வைத்தேன்
நன்பிக்கை என் மடமை வேறென்ன நான் சொல்லுவேன் 

வீழ்ந்திலேன் என்றே சூளுரைத்து
வானெங்கும் பறந்திடவோ 
சிரகுகள் நோகும் முன்னமே 
தரை இறங்கவே சொல்லுகின்றார் 

இறகின்றி பிறந்தவன் நான்
சிறகின்றி பரப்பேனோ  
அது சாத்தியம் கனவில் மட்டும் தான்
என்றால் பறந்தே போவேனோ

பாட்டில் பதித்த இதை
நாட்டில் சொல்ல அச்சம்மில்லை
கேட்பவர் யார் சொல்லடி 
கன்னமா எனக்கும் உடன் இல்லையே

கண்கள் கலங்குதலை
கண் நோய் என்று உரைபேன் 
என்நோய் எதுவென்று
யாரிடம் நான் கேட்பேன்
மருந்தே நோயானால் 
மருதுவனாயினும் 
பாவம் என்ன செய்வான் 


சினஞ்சிறு வயதில்  ....

Saturday, May 14, 2011

 இன்பத்தமிழ் 

காட்சி  :

<<<<தலைவன்  கணிப்பொறியில்  கதைத்து  கொண்டே  கடமையும்  பார்க்கிறான்,

தலை  துவட்டிக்கொன்டே  வரும்  தலைவி,
தலைவன்  தின்  தோள்களை  தின்பது  போல்  , பார்வை மேய்கிறாள்,

அதை உணர்ந்தரியாதிருக்கிறான்  தலைவன் >>>>


முதல் துளி முதுகில்
மற்றொன்றோ   தரையில்
மூன்றாவது  பின்கழுத்தில்
"Oops !" என்றாள்
 அனிச்சை  செயலாம்  அது

ஒரு  பதிலும்  இல்லை

கோவத்திற்கு  பதிலாய்  மறுமுயற்சி

"ம்ம்ம்  ... "

மீண்டும்  ஒரு  முயற்சி - தீவிரமாய்,
பெண்மையிலும் மென்மையிலும் சிறு  பெயர்ச்சி

குழல்  மேகம்

பொழிந்தது  மழை மோகம்,

பனி  துளியின்  சூழ்ச்சிக்கு

கிட்டியது  புன்னகை  பரிசு

"Just this one" .. 

பார்வை  தொடர பதற்றம்  இவனுள்
"U know இது ... kinda important " .. 

நகரா  பார்வை
நயாக்ரா நீர்  வீழ்ச்சி
"quick sec, okay" ..
பதிலுக்கு  கண்ணால்  நகைத்தாள்
சிரிப்பொலி   ஏதுமில்லை
பரிமாற்றமங்கள், பரிபாஷைகள்.

பனித்துளிகளின்  சூழ்ச்சியோ
- பளீச்சிடும்
புன்னகைகளில்  முடிந்தது
உற்றதே  உற்றதே  அப்பரிசு

கூந்தலை  நூல்கன்டாய் கொண்டு

முள்ளைப்பூ விரலூசி தைத்து காற்றிலே சித்திரைப்பூத்தையல்,
தைத்த படியே, பார்வை வைத்தபடியே, நெருங்கிவர

இடம் வளம் கால்கள் ஒரே நேர்க்கோட்டில் நடை பதிக்க

இடம்  வளம்  என இடை மட்டும்  ஊஞ்சல்
உள்மூசில்  உஷ்ணம் , உள்ளமும்  ஊஞ்சல்

பன்னீர்  பூக்களின்  சூழ்ச்சி  ஆரம்பம்

பறந்து  விரிந்த  தோள்கள்  மேல் 

அவள் விரல் நாட்டியம் அரங்கேற்றம்
அடடா இது  எப்படி சாத்தியம்
சத்தம்  இல்லை  ஆனாலும்  இதுவுமோர்  வகை  தோல்(ள்) வாத்தியம்

பெண் விரல்கள்  பட்டது  - பட்டு  அது 

திரண்ட  தோள்களின்  தோய்வையது  கலைந்தது

பன்னீர் பூக்களின்  சூழ்ச்சியோ 

பனிவிலகும் 
முத்தங்களில்  முடிந்தது 
உற்றதே  உற்றதே  இப்பரிசு

அலை மீன்டினும்  நுரை  காணும்  கறையழகு

நிறமில்லா முத்தக்கரை  கன்னத்தில்  பேரழகு
இமைக்கொட்டும்  விண்மீன்கள்  இரவில்  வானழகு
இமய்கொட்டா  இவள் கண் மீன்கள் எப்போதும் தானழகு

பிள்ளை  சிரிப்பை  சிந்தியவள்

புன்னகை  போரில்  முந்தியவள்
போக்கிரியாய்   மாறுகிறாள்
பொல்லாத  பார்வையால்
இன்னும்  இன்னும்  கோருகிறாள்

கரு  விழி  பேசும்  குறுமொழி

அதை மொழிப்பெய்ர்த்திடவே
வந்தார்  வாத்சாயன  குரு
விளக்கம் இனி வருவபை


"வெட்கம்  சற்றே மறக்கும் ஆவல்

உண்டானதே என்றுமிலாமல்  இன்றே 

வந்துவிடு  நீ  உடனே ,
இல்லையெனில்  வெட்கம்  மீண்டும்  வந்துவிடும்  சட்டென்றே "

கூர்விழி கூறுமொழி

நேர்மொழி  என  உணர்ந்தான்
தேரழகை  புணர்ந்தான்

இசைந்தால்  இணங்கி

இசைத்தான்  நெருங்கி
அசையும் முற்கள்
அசைந்ததா  என்ன

யாரறிவார் ..

சரணம்  முடிந்தும்

முடியா  வீணை
சில  சிணுங்கல்கள் ......


<<<< இருவர் இசையில் நாம் யார் அபஸ்வரம்
இனபத்தமிழ் படும் பாடு ...........
இனி அவர் பாடு
இருந்தால் "தலைவி" - போய் கொண்டாடு
இல்லையெனில், ஹ .... கனவில் துணை தேடு >>>

Saturday, February 5, 2011

மெய்த்தேடல்

நாஸ்திகம் பேசி நண்பரை இழப்பதா -       அல்லது அடியார்ப்போல்
ஆஸ்திகம் பேசி தன்னையே இழப்பதா -    நல்லது இரண்டும்! 
இரண்டில் உத்தமம் எதுவென்று எண்ணி -சொல்வதென கொண்டேன் - 
அற்ற்ரோர்க்கு
அற்றதை அற்றது எனாதிருப்பதே  உற்றதென கண்டேன்




{அறிவற்றோர்க்கு
அற்றதை அற்றது எனாதிருப்பதே  உற்றதென கண்டேன்
கண்ணிருந்தும், 
காணும் திறனிருந்தும் , 
கனவற்றோர்க்கு
அற்றதை அற்றது எனாதிருப்பதே  உற்றதென கண்டேன்}


பற்றதை அறுத்தால் பரமனை காணலாம்
பரமனை கண்டால் மோட்சம் கிட்டும்
"மோட்சம் என்பதும் பற்றில் ஒருவகை "
பட்டதும் - தைத்தது நெஞ்சில் - எண்ணம் -அது முள்வகை

இந்த அக்கினி குஞ்சினை சிந்தையில் வைத்தேன்
அகலெ
ன அகன்றது ;
என் வழி தெரிந்தது !

எந்தையர் முந்தையர் கண்டதை கூறினார்
அந்தமும் ஆதியும் அற்றவர் ஆண்டவர்
அப்படி பட்டவரை 

இவரெலாம்  எங்கனம் கண்டனர், என்னதான் கூறினார்

"கேட்பவர் கேனைய
ராயின்,கேழ்வரகில் நெய்யொழுகும்



"கண்டு ஒன்று சொல்லேல்"
அடியேன் கூறவில்லை , அவ்வையின் கூற்றிது


அவர் கண்டு அதை கூறினாரா 
இல்லை கண்டதையும் கூறினாரா 

ஐந்து உள்ளவர் ஆய்ந்து பார்த்திளார் 

ஆராய்ந்து  பார்த்திட ஆறாவதும் வேண்டும்
அஃது தான் கடவுள் ! என கூறுவோர் சிலர்
 
தன்னை போலவே உன்னையும் படைத்தான்
அவ்வன்னளை  இல்லை என சொல்லலாமா? 
என வினவுவர் இன்னுமும் உளர் 


மனிதன் படைத்த கடவுள்
மனிதன் போலவே இருப்பது
வர்த்தகமே! வேறொன்றுமல்ல



ஒட்டு சேகரிப்பன்று ஒழுக்கமாய் வரும் முன்னாள் ரௌடி;
கோயிலை வளம்வரும் அமெரிக்க சுற்றுலா பயணி;
பண்டிகை நாளில் நாமனியும் கலாச்சார  உடைமாதிரி;


இந்த வேடங்களுக்கெல்லாம் 

"இறை" எனும் கோட்பாடு முக்கிய முன்மாதிரி


நன்கு அறிமுகம் ஆனால்
வியாபாரம் நன்றாய் தான் நடக்கும்
மேலா
ண்மை  படித்தோர்க்கு நிச்சயம் விளங்கும்



கூடவே நடந்துவரும் சுமைத்தாங்கி  கடவுள்
கை வளிக்கும் போதெல்லாம் பாரம் இரக்கலாம்
அத்தனை நல்ல ஈசனை நீ நிந்தனை செய்யலாமா


ஈசனை நிந்தனை எங்கு செய்தேன்  
யோசனை நினையே செய்யச்சொன்னேன்


மேலே ஏற, தானே ஏணி 
மேலேறிய பிறகும் கூட ஏணியை சுமைத்தல் ஏனடா , 
இது காய்கனிகள் இருக்க 
அதன் காம்பிணை சமைத்தல் போலடா


சுமைத்தாங்கியல்ல -சுமையே கடவுள் தானடா
இறக்கிவிடவப்பா;  அறிவெனுமொளியை ஏற்றிவிடப்பா


காட்டுவாசியாய் கிடந்தவனுக்கு வைக்கப்பட்ட கட்டுப்பாடு
ஒழுக்கமென்பதை உடனே ஏற்க செய்யப்பட்ட ஏற்ப்பாடு
புண்ணிய பாவங்கள், சுவர்க்க நரகங்கள், பிரத்தேயக வழிபாடு
இவையெல்லாம் 'பரிசும் ஒறுப்பும்'  கோட்பாடு 
இதில் கடைசி அத்யாயம், ஆயுதமேந்திய அன்பு ஆண்டவர். 


இதுவும் கூட நிந்தனை அல்ல 
அடியேன் சிந்தனை, அவ்வளவு தான் 
இல்லையென்று கூட கூறவில்லை
"இருந்திருந்தால் தொல்லையில்லை"