Monday, April 8, 2019

Seethayanam

கனவினில்  ஒருநாள் விசும்பலின் சத்தம்,

பெண்ணினை ப்பார்த்தால் பேதைப்போல் உருவம்.

ஸ்ரீராமனின் கதையோ யாவர்க்கும் தெரியும்,

என் கதை கேளென சீதையின் வருத்தம்!


இன்றிங்கு வந்திருப்பதோ  சீதாபிராட்டி,

என்றே நான் துவங்கவிட்டேன் தலையையும் ஆட்டி,

ராமனவன் பொம்மையை கண்முன் நிறுத்தி,

நற்கேள்விகள் கேட்டாள் வதக்கி வாட்டி.


....


ராவணன் என்றுமோர் ராட்சதன் ஆயினும்,

திராவிடம் போற்றிடும் கண்ணியம் கொண்டவன்.

ராமனும் கற்றிட வேண்டுமே அவனிடம், 

என்றுதான் சொல்லுதே பெண்மனம் என்னிடம்.


கல்லையும் பெண்ணென மாற்றிடும் வரதனே

மலையினை கடலினை நீ கடப்பதும் எப்படா

ஒவ்வொரு கல்லிலும் அகிலையை கண்டயோ

ஒவ்வொரு துளியுமே காய்ந்திட நின்றயோ


என்னையே என்னியே கரைந்திடும் வேளையும் 

உன்னையும் எண்ணியே வாடுதல் என் வேலையா

என்னிலே உள்ளதீ உடம்பெல்லாம் பற்றியும் 

உன்பெயர் சொல்லியே அபலைநான் போற்றவா


இங்கு வாழ் ராவணன் நல்லதோர் பாடகன்

வீணையை மீட்டிட கற்றவன் ஆனதால்

என் மனமின்றியே என்னையும் மீட்டிளான்

என்றுதான் உணர்ந்து நீ தாமதம் செய்தயோ


ஆரியன் என்பதால் ஆறியே வருவியோ

வாலியை வீழ்த்தவே மறைந்து நீ எய்தனை

மறைபொருள் மாலவா மாயங்கள் கற்று நீ 

சூரியன் மறையவே காத்துதான் நின்றயோ


கூரிய பற்களை கொண்டதோர் குரங்கினம்

அவர்போல் உன்மனம் தவ்வுதோ தாவுதோ

ஆழிசூழ் உலகிதில்  ஒருத்தியின் விழியிலே

வழிந்தி டும் நீருக்கே மகத்துவம் உள்ளதோ


 விரகத்தின் முற்களை இறுக்கமாய் அணைக்கவோ 

 விரதமே இதுவென விரும்பி நான் ஏற்கவோ

 பேதையின் மனமிதை பெயர்த்து நான் எடுக்கவோ 

 ஊரை நான் அஞ்சியே உண்மையை மறைக்கவோ


நீயில்லா அரண்மனை எனக்குமோர் அடுமனை

என்றுதான் என்னியே வந்தனள் உன்னுடன்

வீரனாய்  உன் பெயர் ஊரெல்லாம் நிலைக்கவே 

பெண்ணிவள் துன்பங்கள் படுதலும் தேவையோ


சீதயைப்பார்!   என சொல்லியே பெண்டிரை

வீட்டிலே பூட்டியே வீண் என செய்குவர்

ஸ்திரீ இவள்  சாபங்கள் மெல்லவே பலித்திட

வீனராய் போகுவர் ஆரியத்தாண்டவர்


திராவிட வீழ்ச்சியை பெண்கொண்டு செல்வதா - சிறு

தீவினை வளைத்திட பார்க்கடலவன் வேண்டுமா

இதை கதை என்றும் நம்புதல்  கற்பனைக்கு இழிவாடா

இதை வடித்திட திருடனும் திருந்தியதேனடா 


ஓவிய ராமனின் உடலெல்லாம் நீலம் பார்

நஞ்சென அஞ்சியே கும்பிடும் உலகைப்  பார்

காவிய ராமனை காந்தியும்  சீண்டிலார் 

தேரிய யாருமே வணங்கிடா இறையைப்பார் 


கரடிகள் குரங்குகள் அசுரராம் திராவிடர்

ஆறறிவு உள்ளவர் எல்லோருமே ஆரியர்

ஆரியன் வேலையே திராவிடம் பழிப்பதே

திராவிடன் வேலையா வீண் வதந்திகள் தாங்குதல் 


பழியினை தாங்கியும் பிரிவினை தாங்கியும்

வெறுப்பினை ஏற்பினும் சிரிப்பினை வழங்குதல் 

இடுக்கணும் வருகையில் நகைத்திட தெரிந்ததால்

இவரது கேளிகள் பொருட்படுத்திலை நாமுமமே


என் கனவிலே வந்தது மைதிலி தானா

தன்மானமே கற்பெனும்  ஈ வே ரா தானா 

ராமசாமி எனும் பெயரினைக் கொண்டே 

சாமியில்லை என்று சொன்ன நம்  பாட்டன் தானா

  

No comments:

Post a Comment