Wednesday, October 16, 2013

0110-Sampangi ! Or Kanavu !

0110 - சம்பங்கி ! ஓர் கனவு 


பூஜ்ஜியம் ஒன்று ஒன்று பூஜ்ஜியம்
என்னுடன் நின்று பூவையின் போர்களம்
 கனவிலும் கானா காட்சிகள் கண்டினும்
கனவே வெறுங்கனவே
என என் கண்களே சொல்லிடும்

உச்சியில் தந்ததோ
உச்சியும் குளிர்ந்து உன்
உள்ளமும் குளிர்ந்திட

நெற்றியில் நட்டதோ
நெறிகள் மீறாது
நேசம் பகிர்ந்திட

கன்னங்களில் அச்சு
கலங்கமில்லாமல் தான் வைத்தேன்
கண்டெடுத்தவன் போல் நீ
கானவேண்டும் என்றென்னி

முகமெல்லாம் நிறைத்தேன்
ஈரம் மாற்ற ஈரம் செய்தேன்
ஈர நெஞ்சின் தீரம் பார் தோழி

உன்னை என்னை கேட்டுக்கொன்டா
சுழல்கிறது இந்த வாழ்வு
சொக்கட்டான், சதுரங்கம், சோழி!

நிலவை தான்டிய பொழுதே
நிலைமை மறந்தேன்
கழுத்தில் இட்டது தான்
கலக்கத்தின் ஆரம்பம்
அத்துமீறல்களுக்கும்
அர்த்தமுள்ளதோவெனவொரு தேடல்

என்னை மீறும்
என்னம் வந்தே
எல்லை மீற
முகத்திரை விலகியதே
அகம் நாடயிது நீ என்றே
அடிநெஞ்சம் உளறியதே
எனக்கே என் தேவைகள்
ஏனோ இன்று புரிந்ததே

நட்போடு தீராது
காதலிலும் சேராது
புது வித உறவிதுயாது
யாரிடமும் கேட்டறியாது
அன்பிதை உணர்ந்தேன்
மொழியிலாமல் உறைத்தேன்

வீணையின் நரம்புகள்
பட்டினில் போர்த்தி
மென்கழுத்ததை செய்தார்ப்போலும்
பட்டுநூல்களை பக்குவமாய்
பாகு பிடித்தே
யாழ் கம்பிகள் செய்தார்ப்போலும்
ஒரு படைப்பு

மனிதன் படைப்பென்றால் - இசைக்கருவி
மரத்தினில் வாழ்ந்திருந்தால்- இன்னிசைக்குறுவி
மனமெல்லாம் கொள்ளை கொள்பவலே
நீ அறிவாயா நீயே எனக்கு இசையறுவி

யாழோ குழலோ நாதம், என மென்குறள்
யாரோ சொல்வார் எவ்விதம் ஒலிக்குது நின் குறள்
விண்னவர் கண்டிலர்,நாரதன் சாட்சி
(யாவர்க்கும்) நலம்புரி சங்கு அதை முத்தமிட்டு
நன்றிகள் சொல்வதே எனக்கு மீட்சி

அது ஸ்வரம் பிடித்து
எனை ஊக்குவித்த
நாட்களின் என்னிகை நீ உணராய்
ஆயினும் நான் மறவேன்
ஆவினை கன்றே மறந்தாலும்
ஆவியை ஊனே மறந்தாலும்
நான் மறவேன் நான் மறவேன்

அபஸ்வரம் என்னை,
செல்லமாய் தட்டும்
தால ஜதிகள் தந்து காபாற்றும்
உன் இதய துடிப்பு,
ஆதித்தாலம் அஃது தானோ
என்ற நினைப்பும் எனக்கு இருக்கு

என்னை என்னி துடிக்கிற இதயம்
அதை அன்பொடு தாங்கும் தாய்மை
அங்கும் முத்தங்கள் பதித்திருந்தால்
தவறொன்றுமில்லை
அறிந்தும் அறியாமலும் நான் உன் பிள்ளை

குழல் வாய்
சங்கே சங்கு
அடித்தொன்டை
மார்பு மத்தி
மூச்சுக்குழாய்
மேல்வயிறு
அடிவயிறு

ராகங்கள் உருண்டுவரும்
தலைக்கீழ் அறுவி
என்னை பொருத்த வரையினில்
நீயோர் அதிசையப்பிறவி
உன்னில் நனைந்தேனே நான்
பல நாள் உருகி உருகி

முத்தங்களால் படிக்கட்டு
கட்டினேன் நான் இடம் விட்டு
அதில் வழுக்காமல் நகருமோ
என் நாட்கள் இனி பிடிகொண்டு

சம்பங்கி விரல்களுக்கு
முத்தங்கலே ஏற்ற பரிசு,
அவை மன்னிக்காத வரை
இவன் பாழ்நிலம், தரிசு
என்னையும் ஏற்கும் உன்
சிறு இதயம் நிஜமாகவே
மிக மிக பெருசு

இப்படிக்கு நன்றியுள்ள ஜீவன்
போல் இருக்க என்றும் நினைக்கும் இவன்
ஸ்வரமே வீணைக்கு ஆதாரம்
புரியவைத்தாய், அன்பே பெண்மைக்கு ஆதாரம்
பேரன்பாய் செய்கிறாய் நீ அதிகாரம்
ஆதலால்தானடி 
உன்னை சுற்றியே என் கடிகாரம்