Saturday, February 5, 2011

மெய்த்தேடல்

நாஸ்திகம் பேசி நண்பரை இழப்பதா -       அல்லது அடியார்ப்போல்
ஆஸ்திகம் பேசி தன்னையே இழப்பதா -    நல்லது இரண்டும்! 
இரண்டில் உத்தமம் எதுவென்று எண்ணி -சொல்வதென கொண்டேன் - 
அற்ற்ரோர்க்கு
அற்றதை அற்றது எனாதிருப்பதே  உற்றதென கண்டேன்




{அறிவற்றோர்க்கு
அற்றதை அற்றது எனாதிருப்பதே  உற்றதென கண்டேன்
கண்ணிருந்தும், 
காணும் திறனிருந்தும் , 
கனவற்றோர்க்கு
அற்றதை அற்றது எனாதிருப்பதே  உற்றதென கண்டேன்}


பற்றதை அறுத்தால் பரமனை காணலாம்
பரமனை கண்டால் மோட்சம் கிட்டும்
"மோட்சம் என்பதும் பற்றில் ஒருவகை "
பட்டதும் - தைத்தது நெஞ்சில் - எண்ணம் -அது முள்வகை

இந்த அக்கினி குஞ்சினை சிந்தையில் வைத்தேன்
அகலெ
ன அகன்றது ;
என் வழி தெரிந்தது !

எந்தையர் முந்தையர் கண்டதை கூறினார்
அந்தமும் ஆதியும் அற்றவர் ஆண்டவர்
அப்படி பட்டவரை 

இவரெலாம்  எங்கனம் கண்டனர், என்னதான் கூறினார்

"கேட்பவர் கேனைய
ராயின்,கேழ்வரகில் நெய்யொழுகும்



"கண்டு ஒன்று சொல்லேல்"
அடியேன் கூறவில்லை , அவ்வையின் கூற்றிது


அவர் கண்டு அதை கூறினாரா 
இல்லை கண்டதையும் கூறினாரா 

ஐந்து உள்ளவர் ஆய்ந்து பார்த்திளார் 

ஆராய்ந்து  பார்த்திட ஆறாவதும் வேண்டும்
அஃது தான் கடவுள் ! என கூறுவோர் சிலர்
 
தன்னை போலவே உன்னையும் படைத்தான்
அவ்வன்னளை  இல்லை என சொல்லலாமா? 
என வினவுவர் இன்னுமும் உளர் 


மனிதன் படைத்த கடவுள்
மனிதன் போலவே இருப்பது
வர்த்தகமே! வேறொன்றுமல்ல



ஒட்டு சேகரிப்பன்று ஒழுக்கமாய் வரும் முன்னாள் ரௌடி;
கோயிலை வளம்வரும் அமெரிக்க சுற்றுலா பயணி;
பண்டிகை நாளில் நாமனியும் கலாச்சார  உடைமாதிரி;


இந்த வேடங்களுக்கெல்லாம் 

"இறை" எனும் கோட்பாடு முக்கிய முன்மாதிரி


நன்கு அறிமுகம் ஆனால்
வியாபாரம் நன்றாய் தான் நடக்கும்
மேலா
ண்மை  படித்தோர்க்கு நிச்சயம் விளங்கும்



கூடவே நடந்துவரும் சுமைத்தாங்கி  கடவுள்
கை வளிக்கும் போதெல்லாம் பாரம் இரக்கலாம்
அத்தனை நல்ல ஈசனை நீ நிந்தனை செய்யலாமா


ஈசனை நிந்தனை எங்கு செய்தேன்  
யோசனை நினையே செய்யச்சொன்னேன்


மேலே ஏற, தானே ஏணி 
மேலேறிய பிறகும் கூட ஏணியை சுமைத்தல் ஏனடா , 
இது காய்கனிகள் இருக்க 
அதன் காம்பிணை சமைத்தல் போலடா


சுமைத்தாங்கியல்ல -சுமையே கடவுள் தானடா
இறக்கிவிடவப்பா;  அறிவெனுமொளியை ஏற்றிவிடப்பா


காட்டுவாசியாய் கிடந்தவனுக்கு வைக்கப்பட்ட கட்டுப்பாடு
ஒழுக்கமென்பதை உடனே ஏற்க செய்யப்பட்ட ஏற்ப்பாடு
புண்ணிய பாவங்கள், சுவர்க்க நரகங்கள், பிரத்தேயக வழிபாடு
இவையெல்லாம் 'பரிசும் ஒறுப்பும்'  கோட்பாடு 
இதில் கடைசி அத்யாயம், ஆயுதமேந்திய அன்பு ஆண்டவர். 


இதுவும் கூட நிந்தனை அல்ல 
அடியேன் சிந்தனை, அவ்வளவு தான் 
இல்லையென்று கூட கூறவில்லை
"இருந்திருந்தால் தொல்லையில்லை"