நேற்று நிறைந்ததென கனவை
இன்னுலகில் பகிர்ந்து உவந்தேன்
நேற்று நடந்ததுவுஊம கனவே
எனச்சொல்லி கண்கள் சுட்டுக்கொண்டேன்
நேரம் வரவில்லை எனச்சொல்லி
கடி காரத்தை குறைச்சொல்லவோ
ஈரம் அற்றவர் பால் வைத்தேன்
நன்பிக்கை என் மடமை வேறென்ன நான் சொல்லுவேன்
வீழ்ந்திலேன் என்றே சூளுரைத்து
வானெங்கும் பறந்திடவோ
சிரகுகள் நோகும் முன்னமே
தரை இறங்கவே சொல்லுகின்றார்
தரை இறங்கவே சொல்லுகின்றார்
இறகின்றி பிறந்தவன் நான்
சிறகின்றி பரப்பேனோ
அது சாத்தியம் கனவில் மட்டும் தான்
என்றால் பறந்தே போவேனோ
பாட்டில் பதித்த இதை
நாட்டில் சொல்ல அச்சம்மில்லை
கேட்பவர் யார் சொல்லடி
கன்னமா எனக்கும் உடன் இல்லையே
கண்கள் கலங்குதலை
கண் நோய் என்று உரைபேன்
என்நோய் எதுவென்று
யாரிடம் நான் கேட்பேன்
மருந்தே நோயானால்
மருதுவனாயினும்
பாவம் என்ன செய்வான்
சினஞ்சிறு வயதில் ....